ஆரணி அருகே அரிசி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் காெள்ளை
ஆரணி அருகே அரிசி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஆரணி பையூர் நான்கு முனை சந்திப்பு அருகில் அரிசி ஆலை பக்கவாட்டில் உள்ள தெருவில் வசித்து வருபவர் விஜயன் (வயது 37). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், மனைவி அபிநயா, மகன் கார்த்தி, மகள் அரிஷிதா ஆகியோர் 15-ந்தேதி ரயில் மூலமாக குற்றாலத்துக்கு சுற்றுலா சென்று விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பினார்கள்.
வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. நகை, பணம் திருட்டு பீரோவில் வைத்திருந்த குழந்தைகள் காது குத்தும் நிகழ்ச்சியின்போது அன்பளிப்பாக பெறப்பட்ட தங்க நகைகள் என மொத்தம் 4½ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து விஜயன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடயங்களை பதிவு செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.