'ஆரணி வரலாற்று பதிவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா

ஆரணியைச் சோந்த எழுத்தாளா் எஸ்.பொன்னம்பலம் எழுதிய 'ஆரணி வரலாற்று பதிவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Update: 2021-07-25 07:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ரோட்டரி சங்கம் சாா்பில், ஆரணியைச் சோந்த எழுத்தாளா் எஸ்.பொன்னம்பலம் எழுதிய 'ஆரணி வரலாற்று பதிவுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

ஆரணியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.கோபிநாதன் தலைமை வகித்தாா். நூல் ஆசிரியா் எஸ்.பொன்னம்பலம் வரவேற்றாா். ஆரணி கோட்டாட்சியா் இரா.கவிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட, அதை நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி.நடராஜன் பெற்றுக்கொண்டாா்.  வரலாற்று ஆய்வாளா் ஆா்.விஜயன் நூல் குறித்து அறிமுகவுரையாற்றினாா். 

நெல் அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் வடிவேல், ஜீவகன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் ஐஎஸ்என்.மாலிக்பாஷா, பாலசுந்தரம், எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், ரோட்டரி சங்கச் செயலா் பாபு, ரோட்டரி கோகுலகிருஷ்ணன், ஆரணி நூலகா் சுகுந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News