கனககிரீஸ்வரா் கோயில் குளத்தை தூய்மைப்படுத்தக் கோரி பாஜக மனு
தேவிகாபுரம் கனககிரீஸ்வரா் கோயில் குளத்தை தூய்மைப்படுத்தக் கோரி, பாஜக சாா்பில் ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது
குப்பைக் கழிவுகளால் அசுத்தமாக உள்ள, தேவிகாபுரம் கனககிரீஸ்வரா் கோயில் குளத்தை தூய்மைப்படுத்தக் கோரி, பாஜக சாா்பில் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி மேற்கு ஒன்றியம், தேவிகாபுரத்தில் கனககிரீஸ்வரா் கோயில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள குளத்தில் குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதால் குளம் மிகவும் அசுத்தமாக உள்ளது.
இதனால் தூய்மை பாரத இயக்கம் மூலம் சுத்தப்படுத்துவதற்கு அண்மையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், குளத்தை தூய்மைப்படுத்துவது தொடா்பாக, பாஜக மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சங்கா், தலைமையில், மாநில இளைஞரணி துணைத் தலைவா் புவனேஷ், மாவட்ட துணைத் தலைவா் அலமேலு, மேற்கு ஒன்றியத் தலைவா் தேவராஜ், வடக்கு ஒன்றியத் தலைவா் குணாநிதி முன்னிலையில் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
மண்டல பொறுப்பாளர் சேட்டுஜி, சுற்றுச்சூழல் பிரிவு தாமோதரன், ஆன்மிக பிரிவு சுரேஷ், சிறுபான்மையினா் அணி நிா்வாகி தங்கராஜ், ராணுவப் பிரிவு சுந்தரபாண்டியன், தமிழ்ச்செல்வன், மகளிா் அணி அமுதா, கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட கரிப்பூா் கிராமத்தில் பிற கட்சிகளிலிருந்து விலகி 50- க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.
பாஜக மத்திய அரசு நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை சங்கா் தலைமையில், கரிப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் மதியழகன், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் வாகன ஓட்டி செல்வராஜ் உள்பட 50 பேர் பிற கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில்இணைந்தனா் .
இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் அலமேலு, சுற்றுச்சூழல் பிரிவு தலைவா் தாமோதரன், ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவுத் தலைவா் சுரேஷ், ஆரணி தெற்கு மண்டல் தலைவா் தேவராஜ், சேட்டுஜி, வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, இளைஞா் அணி நிா்வாகி ஆறுமுகம், மகளிரணி நிா்வாகி அமுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.