ஆரணி அருகே புதிய கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
ஆரணி அருகே இராட்டினமங்கலம் கிராமத்தில் புதிய கால்வாய் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.;
புதிதாக கால்வாய் அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இராட்டினமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆரணி எம்.எல்.ஏ நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கி இராட்டினமங்கலம் பகுதியில் புதிய கால்வாய் பணிக்கு ஆரணி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மதுசூதனன், இ.பி நகர்குமார், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.