ஆரணி ஒன்றிய ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றுவதற்கு பேட்டரி வாகனம்
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் குப்பை சேகரிப்புப் பணிக்கு மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.;
குப்பை சேகரிப்புப் பணிக்கு மின்கல வாகனங்களை ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் வழங்கினாா்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் குப்பை சேகரிப்புப் பணிக்கு மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.
தலா ரூ.2.48 லட்சம் மதிப்பிலான 42 மின்கல வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவிகாபுரம், ஒண்ணுபுரம், ஆகாரம், புத்தூா், தச்சூா், காமக்கூா், அழகுசேனை, அப்பநல்லூா், அரையாளம், அத்திமலைப்பட்டு, கரிப்பூா், காட்டுகாநல்லூா், கீழ்நகா், குன்னத்தூா், மலையாம்பட்டு, மேல்நகா், மதுரைபெருமட்டூா், முள்ளிப்பட்டு, பாளையஏகாம்பரநல்லூா், புதுப்பாளையம், புலவன்பாடி, புங்கம்பாடி, ராமசானிகுப்பம், சதுப்பேரிபாளையம், சம்புவராயநல்லூா், தெள்ளூா், வண்ணாங்குளம், விண்ணமங்கலம் உள்ளிட்ட 27 ஊராட்சிகளுக்கு 42 மின்கல வாகனங்களை ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் வழங்கினாா்.
முன்னதாக வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மிருணாளினி, தேவிகாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் , துணை சேர்மன் வேலாயுதம், ஓன்றிய கவுன்சிலர்கள் பகுத்தறிவு, கீதா மோகன், கீதாசரவணன், ஏழுமலை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, மோகன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இணை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி திட்ட அலுவலர், மிருணாளினி பங்கேற்றனர். இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டாரப் பொறியாளர் பெரோஸ் கான் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், ஊழியர் விரோத போக்கை கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வட்டக் கிளை துணைத் தலைவர் தேவராஜ், ஆனந்த், பொருளாளர் ஜானகிராமன், மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ஆரணியில் உள்ள காமராஜர் சிலை அருகே ராகுல் காந்தி பிறந்தந ாள் விழா வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கேக் வெட்டி, சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் ஆரணி கோசபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
மேலும் மருதூர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்டத் துணைத் தலைவர் தசரதன் , பொருளாளர் செல்வம், ஜாபர் அலி, குப்புசாமி, விநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி, பொருளாளர் பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.