மன்சூராபாத்தில் வங்கி சேவை துவங்க ஆரணி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்
ஆரணி மன்சூராபாத்தில் வங்கி சேவை துவக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்;
ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம். கே. விஷ்ணு பிரசாத், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லி நிதி அமைச்சகத்தில் சந்தித்தார்.
அப்போது ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போளூர் சட்டமன்ற தொகுதியில் மன்சூராபாத்தில் வங்கி சேவை துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மனு கொடுத்தார்.
ஏற்கனவே இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசாங்கம் கள ஆய்வு மேற்கொண்ட போது, அருகில் கனரா வங்கி உள்ளதால் இப்போது சாத்தியம் இல்லை என அறிவித்திருந்தது.
இப்பகுதியில் உள்ள மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மீண்டும் கள ஆய்வு நடத்திட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.