தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு..
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார்கள் வந்ததால், தனியார் மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரையடுத்து, அந்த மருத்துவமனையில் திடீரென சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.