ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

ஆரணியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2021-09-08 13:20 GMT

தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் தாலுகா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து தனியார் பள்ளி பஸ், வேன் டிரைவர், ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் பஸ்சில் அழைத்துச் செல்ல வேண்டும், மாணவர்கள், டிரைவர், ஊழியர்கள் முககவசம் அணியாமல் பஸ்சில் பயணம் செய்யக் கூடாது, டிரைவர்கள், ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News