சேத்துப்பட்டு அரசு மருத்துவமனை, தச்சம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் கருவி வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு செறிவூட்டும் கருவியை வழங்கினர்.
தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் எடுத்த சீரிய முயற்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வழங்கும் நிதி உதவியை அரசு பெற்று கொரோனா சிகிச்சைக்கு மட்டுமே செலவழித்து வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து முக கவசம் தடுப்பூசி , அரசு அவ்வப்போது கூறும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.