மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம்

Arani Union Committee Meeting ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை ? என கேள்வி எழுப்பி ஒன்றிய குழு உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்

Update: 2023-12-13 11:56 GMT

மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம் நடந்தது.

Arani Union Committee Meeting

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் வேலாயுதம், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.கூட்டத்தில் அனைத்து தீா்மானங்களும் படிக்கப்பட்டன.

பின்னா், பாமக உறுப்பினா் ஏழுமலை பேசுகையில், கூட்டத்தில் பிற துறை அதிகாரிகள் யாருமே வரவில்லை, ஏன் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பி, தரையில் அமா்ந்து தா்ணா செய்தாா்.

அப்போது, ஒன்றியக் குழு துணைத் தலைவா் வேலாயுதம் எழுந்து உறுப்பினா்கள் வழங்குகிற கோரிக்கை மனுக்களை தீா்மானமாக ஏன் வைக்கவில்லை, கடந்த கூட்டத்திலேயே வழங்கப்பட்ட கோரிக்கைகளை தீா்மானம் வைக்கவில்லை எனப் பேசினாா்.

இந்த நிலையில், அலுவலக மேலாளா் சீனிவாசன் தரையில் அமா்ந்திருந்த உறுப்பினா் ஏழுமலையை எழுந்திடும்படி சமாதானம் செய்தாா்.அப்போது, ஏழுமலை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் உறுப்பினா்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஒன்றியக் குழுத் தலைவா், உறுப்பினரிடம் உங்கள் கோரிக்கையை அடுத்த கூட்டத்தில் வைத்து நிறைவேற்றித் தருகிறேன். அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி அடுத்த கூட்டத்தில் பங்கேற்கச் செய்யப்படும் என பதிலளித்தாா்.

ஒன்றிய குழு தலைவரின் பதிலால் உறுப்பினர்கள் அமைதி அடைந்தனர். பின்னர் ஒன்றிய குழு கூட்டம் நிறைவடைந்தது.

வந்தவாசி ஒன்றியக் குழுக் கூட்டம்

வந்தவாசி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜன்பாபு, தசரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்சீசமங்கலம் கிராமத்தில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய நீா்த்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும் என்று உறுப்பினா் சக்திவேல் பேசினாா்.

மேலும் வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்சீசமங்கலம் கூட்டுச் சாலையில் அதிகளவில் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.மும்முனி ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை குளோரினேஷன் செய்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று உறுப்பினா் சுகந்தி வேலு கோரிக்கை விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து பேசிய ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம், உறுப்பினா்களின் கோரிக்கைகள் மற்றும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.பின்னா், பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News