ஆரணி சீனிவாச பெருமாள் திருக்கோயில் தேர் வெள்ளோட்டம்
Temple Festival -ஆரணியில் கில்லா சீனிவாச பெருமாள் கோவில் புதிய மரத்தேர் வெள்ளோட்டத்தை போட்டி போட்டு வடம் பிடித்து திமுக, அதிமுகவினர் தொடங்கி வைத்தனர்.
Temple Festival -ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத கில்லா சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும். இந்த கோவிலில் உலா வந்த மரத்தேர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் சேதம் அடைந்தது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்க அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அரசின் சார்பில் ரூ.18 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு மக்கள் பங்களிப்புடன் ரூ.34 லட்சம் மதிப்பில் தேர் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற வேண்டும் அதன் பின்னர் தான் பிரம்மோற்சவம் திருத்தேர் திருவீதி உலா நடைபெறும்.
தற்போது வருகிற புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7 ம் நாள் 3.10.22 ஆம் தேதி திருத்தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவின்போது தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவிதி உலா நடைபெறும்.
இதுசம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு பிரம்மோற்சவ விழாவிற்கு முன்பே புதிய தேர் வெள்ளோட்டம் விடப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பை கடந்த 1 ம் தேதி நமது InstaNews. செய்தித்தளத்தில் வெளியிட்டிருந்தோம்
இதையடுத்து உடனடியாக துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 12-ந் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
அதன்படி நேற்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் சிவாஜி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் மணி முன்னிலை வகித்தார். சிறப்பிழைப்பாளராக செய்யாறு எம் எல் ஏ ஜோதி, திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் ஆகியோரும், நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி பொறியாளர் விஜய காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு திருத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சிறிது நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நிர்வாகிகளுடன் வந்தார். அவருக்கும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க. சார்பில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராசன், நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, பொதுமக்கள், பக்தர்கள், அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2