ஆரணி ஸ்ரீகால கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆரணி ஸ்ரீகால கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார்.;

Update: 2022-03-07 01:39 GMT
ஆரணி ஸ்ரீகால கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ கால கண்டேஸ்வரர் கோயில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

  • whatsapp icon

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கால கண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார்.

இக்கால கண்டேஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு கால கண்டீஸ்வரர் சன்னதி, அப்பைய தீட்சிதர் சன்னதி, பெருமாள் சன்னதி, விநாயகர் சன்னதி ஆகியவை புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாரதனை, நடைபெற்றது . நேற்று மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.  இதில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News