இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆரணியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்;

Update: 2021-12-13 07:47 GMT

இலங்கை தமிழர்களுக்கு கோட்டாட்சியர் கவிதா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

ஆரணி மில்லர்ஸ் சாலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது . இங்கு உள்ளவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டாட்சியர் கவிதா தலைமை வகித்து இலங்கை அகதிகளிடையே பேசினார். பின்பு 150 குடும்பங்களுக்கு போர்வை உள்ளிட்ட துணிகளும் சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன. 79 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் , ஒன்றிய குழுத் தலைவர் கனிமொழி , வட்டாட்சியர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் , ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News