ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றம்
ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம், அதன் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கட்ராமன், ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு பேசுகையில், எஸ்.வி.நகரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று, நிறைவேற்றித் தந்தமைக்கு ஒன்றியக் குழுத் தலைவருக்கு நன்றி தெரிவித்தாா். பின்னா், விடுபட்ட பணிகளை செய்து தரும்படி கோரிக்கை விடுத்தாா்.
மேலும், கூட்டத்தில் டெங்கு மஸ்தூா் பணியாளா்களுக்கு ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் ஊதியமும், அலுவலத்தில் அனைத்துத் துறைகளுக்கும் இணையதள வசதிக்காக ரூ.ஒரு லட்சத்து 59ஆயிரமும், சுதந்திர தினத்துக்கு அனைத்து வீடுகளுக்கும் தேசியக் கொடியேற்றுவதற்காக ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் என ரூ.25 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா் உறுப்பினா்கள், ஒன்றிய செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் அறையை முற்றுகையிட்ட பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஆரணி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகின்றன. மே லு ம் ஆ ரணி ஓன்றியத்திற்கு உட்பட்ட இரும்பேடு ஊராட்சி காமராஜர் நகரில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெண்கள் 100நாள் வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இரும்பேடு காமராஜர் நகரில் உள்ள 100 நாள் பணியில் செய்யும் பெண்களுக்கு இந்தாண்டு இதுவரையில் வெறும் 6நாட்களே பணி வழங்கபட்டதாக கூறி சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் திடிரென ஆரணி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகததில் உள்ள வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் அறையை முற்றுகையிட்டனர். பின்னர் அறையில் திட்ட அலுவலர் இல்லாததால் மேலாளரிடம் பெண்கள் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
மேலும் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்ப டுவதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக வேலை வழங்கப்பட்டு வருவதாகவும் சுழற்சி முறையில் வேலை வழங்கப்படுவதில்லை என்று கூறினர்.
மேலும் இந்த ஆண்டில் இதுவரை தங்களுக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து அலுவலக மேலாளர் தொடர்ந்து வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அறையை பொது மக்கள் முற்றுகையிட முயன்ற சம்பத்தால் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.