டிசம்பருக்குள் வரி செலுத்த ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
டிசம்பருக்குள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை செலுத்துமாறு பொதுமக்களுக்கு ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
நகராட்சிக்கு வரி செலுத்தி முழு ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஆரணி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி , குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் குத்தகை இனங்கள் கடை வாடகை என நிலுவை வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் நிலுவை இன்றி செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தாத உரிமை தாரர்களின் பெயர், வரி விதிப்பு எண், முகவரி மற்றும் நிலுவை தொகைகள் அனைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் விளம்பரப்பலகை ,தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ்கள் மூலம் இறுதியாக வெளியிடப்படும், மேலும் கடை வாடகை நிலுவைத் தொகை அதிகம் உள்ள கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்.
எனவே நிலுவைத் தொகைகள் உடன் செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்கவும் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் , ஜனவரி 1-ஆம் தேதி முதல் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்