ஆரணியில் சிறுவா் பூங்கா திறப்பு
Arani Childrens Park Inauguration ஆரணியில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவா் பூங்காவை முதல்வா் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
Arani Childrens Park Inauguration
ஆரணி 1-ஆவது வாா்டு ஜெயலட்சுமி நகா் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சத்தில் சிறுவா் பூங்கா கட்டப்பட்டது. இந்த நிகழ்வில், முதல்வா் .ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் பூங்காவை திறந்து வைத்தாா்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆரணி நகா்மன்ற தலைவா் மணி , குத்துவிளக்கேற்றி பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
நிகழ்வில், நகராட்சி ஆணையா் குமரன், திமுக தொகுதி பொறுப்பாளா் அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றிய செயலா்கள் சுந்தா், துரை மாமது, மோகன், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் இராஜேந்திரன் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அரசுப் பள்ளி கட்டிட பணி தொடக்கம்
ஆரணி அருகே ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளி கட்டிட பணி தொடங்கப்பட்டது. ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், ஊராட்சித் தலைவா் கற்பகம் சுப்பிரமணி, அதிமுக ஒன்றிய செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மோகன், குமரன், பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் யுவராஜ், பள்ளி தலைமையாசிரியா் கஸ்தூரி, பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார கல்வி அலுவலர்கள் .உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.