திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளை நூலக புரவலர்களுக்கு பாராட்டு விழா

Public Library- திருவண்ணாமலை மாவட்ட கிளை நூலகத்தில் புரவலர்களாக சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-08-01 07:42 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தில் கிளை நூலக புரவலர்களாக சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Public Library- திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மாவட்ட கிளை நூலகத்தில் புரவலர்களாக சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தாசில்தார் மூர்த்தி .முன்னாள் மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன். முன்னாள் பேரூராட்சி தலைவர் கோவர்தன், ராமராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கிளை நூலகர் சிவசங்கரன் வரவேற்புரையாற்றினார்.

பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிதாக சேர்ந்த புரவலர்களை பாராட்டி பேசினார். மேலும் நூலகத்தில் ரூ. 55 லட்சத்தில் டிஜிட்டல் நூலக கட்டிடம் கட்ட பரிந்துரை செய்யப்பட்டது.

மூன்று மாதங்களில் 110 புரவலர்களை  சேர்த்தமைக்காக வாசகர் வட்ட தலைவர் கார்த்திகேயன், நூலகர் மற்றும் புதிதாக சேர்ந்த புரவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் அருள் அரசு, அரசு கருவூல அலுவலர் பூங்கொடி, நூலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News