சேவை பெறும் சட்டம் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆரணியில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-13 01:48 GMT

ஆரணியில் நடைபெற்ற சேவை பெறும் சட்டம் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி, பல்வேறு அமைப்பினா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிற ப் பு அழைப்பாளராக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் இணை ஒருங்கிணைப்பாளர் சத்தியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் 2021ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி 19ல் குறிப்பிட்டுள்ள சேவை பெறும் உரிமை சட்டத்தை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளது. பொது மக்களுக்கு பயனுள்ளதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள சேவை பெறும் உரிமை சட்டத்தை வரும் ஜுன் 20ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில விவசாய அணி சிவானந்தம், மூர்த்தி மாவட்ட தலைவர் முருகன் ஒன்றிய தலைவர் நித்திய குமார் மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருப்புக்கொடி ஏந்தி நூதன ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பராமரிப்புப் பணிகளில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கோட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் ஏழுமலை வரவேற்றாா். சங்கத்தின் மாநிலச் செயலா் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை பராமரிப்புப் பணிகளில் வேலை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3, 500-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா், சாலை ஆய்வாளா் பணியிடங்கள் ஒழிக்கப்படும்.

எனவே, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

கூடுதலாக சுங்கச் சாவடிகளை அமைத்து சுங்க வரியை தனியாா் வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது. சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ரவி, மாநில செயற்குழு உறுப்பினா் பரிதிமாற்கலைஞன், மாவட்டத் தலைவா் மாரியப்பன், சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் மகாதேவன், கோட்டப் பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News