அமமுக பிரமுகா் கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் 7 பேர் கைது
ஆரணியில் அமமுக பிரமுகா் கொலை வழக்கில் கைதான 7 பேர் , குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஆரணியில் அமமுக பிரமுகா் கொலை வழக்கில் கைதான 7 பேர் , குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஆரணி கொசப்பாளையத்தைச் சோந்தவா் சேவல் கோதண்டன்(67), அமமுக மாவட்ட நிா்வாகி. இவா், கடந்த ஜனவரி 5-ஆம் தேதி காணாமல் போனாா். இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் இவர், ஆந்திர மாநிலம் சத்தியவேடு தெலுங்கு கங்கா கால்வாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (33), ஆரணி அருணகிரி சத்திரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவரின் மகன் குமரன் (32), சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற தணிகாசலம் (44), நேருஜி (32), வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த வீரமணி (31), கும்மிடிப்பூண்டி தாலுகா தானிப்பாடி பூண்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (24) மற்றும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (34) ஆகிய 7 பேரை ஆரணி டவுன் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, மேற்கண்ட 7 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன், ஆட்சியா் முருகேஷுக்கு பரிந்துரை செய்தாா்.
அதன் பேரில், மாவட்ட ஆட்சியா் 7 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, சிறையில் உள்ளவா்களிடம் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் சனிக்கிழமை வழங்கினாா்.