ஆரணி; பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவ மாணவியர்
ஆரணியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் அசத்தலான அறிவிப்பு படைப்புகளை மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஆரணியில் அல்முபீன் மற்றும் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குழுமம் சார்பில் நடத்த 14. வது அறிவியல் கண்காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக ஆரணி தாசில்தார் மஞ்சுளா, ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், நகர காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அல்முபீன் மற்றும் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குழுமம் சார்பில் 14.வது அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் அகமது பாஷா அனைவரையும் வரவேற்றார்.தாளாளர் ஏ.எச். இப்ராஹிம் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக ஆரணி தாசில்தார் மஞ்சுளா, ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு,அல்முபீன் மற்றும் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குழுமம் சார்பில் 14. வது அறிவியல் கண்காட்சியில் மாணவ- மாணவிகளின் சுமார் 595 அறிவியல் கண்காட்சி காட்சிப்படுத்தியதை பார்வையிட்டு மாணவர்களை வெகுவாக பாராட்டினார் ,
பின்பு தாசில்தார் மஞ்சுளா பேசுகையில்,
பெற்றோர்களும், பொதுமக்களும் பலரும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை பங்கேற்று மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்திட ஊக்கம் அளிக்கும் வகையிலும்,தி.மலை மாவட்டத்திலே நம் ஆரணி நகரிலிருந்து எதிர்காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கு ஊக்கம் அளித்திட அறிவியல் கண்காட்சியை பார்வையிட வேண்டுமென கூறினார்.
இந்த அல்முபீன் மற்றும் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குழுமம் சார்பில் 14. வது அறிவியல் கண்காட்சி மழலையர் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவ- மாணவிகள் 595 அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை காட்சிப்படுத்தியதை மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
மேலும் 500.க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளையும் அதன் பயன்களையும் மாணவர்கள் காட்சிப்படுத்தினர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு முதல் பரிசாக வரும் கல்வியாண்டில் இரண்டு மாணவர்களுக்கு 50சதவீதம் கல்வி கட்டணமும், இரண்டாம் பரிசாக மூன்று மாணவர்களுக்கும் 30-/- சதவீதம் கல்வி கட்டணமும், மூன்றாம் பரிசாக 20 சதவீதம் கல்வி கட்டணம் சுமார் 10 மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் வழங்கப்படுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இலவச சிறப்பு மருத்துவம், கண் பரிசோதனை நடந்தது. இதில் பொதுமக்களும். மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் பலரும் பங்கேற்று சிகிச்சையை பெற்றனர்.
இதில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் நிர்மல் குமார், து.முதல்வர் நிஷா, அல்முபீன் பள்ளியின் முதல்வர் நதியா மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவியர்கள் பெற்றோர்களும் பொதுமக்களும் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் பள்ளியின் இயக்குநர் ஷாஷியா பர்வீன் நன்றி கூறினார்.