18 ஆண்டுகள் கழித்து தேரோட்டம்- தேர் செல்லும் பாதையை அதிகாரிகள் ஆய்வு
Chariot Temple - ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் 18 ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடக்க இருப்பதால் தேர் செல்லும் பாதை ஆய்வு செய்யப்பட்டது.;
ஆரணியை அடுத்த பையூர் கிராமம் பொன்னியம்மன் கோவிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத்தேரை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Chariot Temple - திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்த தேர் சிதிலமடைந்தது. இதையடுத்து 18 ஆண்டுகள் கழித்து புதிதாக பெரிய மரத்தேர் ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் உற்சவம் தொடங்குகிறது. வருகிற 9-ந் தேதி இரவு தேரோட்டமும் 10-ந் தேதி பகல் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத்தேரையும், தேர்ச்செல்லும் பாதைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆரணி தாசில்தார் க.பெருமாள் மற்றும் மின்வாரியம், தீயணைப்பு துறை, ஊரக உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சங்கர், நாட்டாமைதாரர்கள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2