ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவி
ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்.;
தொடர் மழையின் காரணமாக சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இருளர் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அவர்களுக்கு தேவையான அரிசி , மளிகைப் பொருட்கள் , காய்கறிகள் , பழங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.