பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார்.

Update: 2022-05-19 11:52 GMT

 திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அத்திமலைப்பட்டு ஊராட்சியில்  பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்க பயனாளிகளிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்திருந்தனர்.

வீடு கட்டும் பணி ஆணை வழங்க பயனாளிகளிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.   இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் லஞ்சம் அளித்த ஒருசில பயனாளிகள் தவிர மற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவிட்டார்.  ஊராட்சி செயலாளர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்தும் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார் .

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற புகார்,விசாரணைக்குப் பின்  இதில் சம்பந்தப்பட்டவர்கள்  மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News