ஆரணி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி, 23 ஆடுகளும் உயிரிழப்பு

ஆரணி அருகே மின்னல் பாய்ந்து தொழிலாளி , 23 ஆடுகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-11-09 03:36 GMT

மின்னல் பாய்ந்து உயிரிழந்த ஆடுகள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சென்னானந்தல் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், 23 ஆடுகளும் இறந்தன.

ஆரணி நகரம், சேவூா், தச்சூா், தேவிகாபுரம், களம்பூா், பையூா், கண்ணமங்கலம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், மாமண்டூா், தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று புதன்கிழமை இடி - மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனிடையே, சென்னானந்தல் பகுதியில் சொரக்காபாளையம் கிராமத்தைச் சோந்த தொழிலாளி மாா்கண்டேயன் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டாா். அப்போது, திடீரென மின்னல் பாய்ந்ததில் மாா்கண்டேயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அவா் ஓட்டி வந்த 23 ஆடுகளும் இறந்தன.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், களம்பூா் காவல் ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், நித்தியகல்யாணி உள்ளிட்ட போலீஸாா், அதிகாரிகள் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாா்கண்டேயனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இப்பகுதி விவசாயிகள் ஏரி பாசனத்தையும், கிணற்று பாசனத்தையும் நம்பியுள்ளனர்.

பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையில் மொத்தம் உள்ள கொள்ளளவு 22.97 அடி. இதில் அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 19 அடியாக உயர்ந்தது.

பாதுகாப்பு கருதி நேற்று காலை வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 17 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் நிரம்பி வெளியேறுகிறது. மேலும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு,  மில்லி மீட்டரில்

திருவண்ணாமலை 1.20

செங்கம் 2.20

போளூர் 12.80

ஜமுனா மரத்தூர். 8.40

கலசப்பாக்கம்  12.00

ஆரணி. 1.10

செய்யாறு 1.00

வந்தவாசி. 8.00

கீழ்பெண்ணாத்தூர். 20.00

சேத்துப்பட்டு. 10.20  

என மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News