ஆரணி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆரணி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற கஞ்சா வாலிபர் கைது செய்யப்பட்டார்
ஆரணி அருகே ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற கஞ்சா போதை வாலிபரை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாணவி சாலையில் வரும்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்ற வாலிபர் கஞ்சா போதையில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
மேலும் அந்த வாலிபரை பிடித்து ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர் .இது தொடர்பான புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இளங்கோமீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
பைக்குகளை திருடிய சிறுவன் கைது
காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் இருந்த சுமார் 16 வயதுடைய சிறுவனை அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.
தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
விசாரணையின் போது அந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்ததாம், திருடி செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்து அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான்.
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த காவல்துறையினர் அந்த சிறுவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும், இல்லை என்றால் ஸ்பேர் பார்ட்ஸ்ளை பார்த்து பாட்டாக பிரித்து விற்பனை செய்வதுதான் இதுவரை காவல் துறையினர் கேள்வி பட்டுள்ளனர், ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக்கை திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை தினமும் சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை முதல் முறையாக பார்த்து காவல்துறையினர் ஆச்சிரியமடைந்தனர்.