ஆரணியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்
ஆரணியில் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்பி பங்கேற்றார்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மெய்யூர் மற்றும் சேவூர் ஆரணி டவுன் ஆகிய இடங்களில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக சார்பில் ஆரணி ஒன்றியம் மற்றும் மேற்கு ஆரணி, செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சுந்தர் , மோகன் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் கலந்து கொண்டார். மேலும் கூட்டத்தில் பேசிய எம்.பி.தரணிவேந்தன், கிளை செயலாளர்கள் மற்றும் வார்டு செயலாளர்களை இத்தகைய கூட்டத்தில் சந்தித்து கட்சி பணிகளில் முழமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் தான் பேசிய முதல் பாராளுமன்ற கூட்டத்தில் திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டம் ஆரணி அரிசி தயாரிப்பு மற்றும் நெசவு தொழில் பற்றி பேசி கோரிக்கை வைத்தேன். அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் ஆரணியில் தவிடு தயாரிப்பு கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி எண்ணெய் தயாரிக்கப்படுகின்ற எண்ணெய் தயாரிப்பை ஆரணியில் மேற்கொள்ள கோரிக்கைவைக்க உள்ளதாக தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார் என எம்பி பெருமிதம் தெரிவித்தார்.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் திமுகவின் பவள விழா முப்பெரும் விழா மற்றும் கட்சியின் ஆக்க பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதே போல ஆரணி டவுன் தனியார் மண்டபத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் மணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தன், மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்தி, திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.