ஆரணி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற மினி வேனில் தீ

ஆரணி அருகே இரு வேறு பகுதிகளில் வைக்கோல் ஏற்றிச்சென்ற மினவேன் வைக்கோலுடன் எரிந்து சேதமானது.;

Update: 2023-04-13 03:20 GMT

கோப்பு படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜங்கல் பகுதியைச் சேர்ந்த சாரதி (வயது 36). இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தில் நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகளிடம் வைகோலை விலைக்கு வாங்கிக்கொண்டு மினி வேனில் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி சென்றதாக தெரிகிறது. வேன் புறப்பட்டு சென்ற சிறிது தூரத்தில் மின் ஒயரில் மினிவேன் உரசியுள்ளது. அதனால் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி மினிவேன் எரியத் தொடங்கியது.

உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படைவீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் வைக்கோல் முழுவதும் எரிந்ததோடு வேனும் சேதமானது. இது சம்பந்தமாக களம்பூர் போலீசில் சாரதி புகார் அளித்தார். அதன்பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). விவசாயி. இவர் தனது மாடுகளுக்கு தேவையான வைக்கோலை சேவூர்- ரகுநாதபுரம் கிராமத்தில் வாங்கி தனது மினிவேனில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை குன்னத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார். கீழ் நகர் அருகே சென்றபோது கொண்டிருக்கும் போது அவ்வழியாக தாழ்வாக சென்ற மின் ஒயரில் வைக்கோல் பாரம் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த வினாடியே வைக்கோல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக மினிவேனை ஓரங்கட்டியவர்கள் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தண்ணீர் பாய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசம் ஆனதோடு மினிவேனும் சேதம் அடைந்தது. இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News