ஆரணி அருகே பண்ணையில் தீ பிடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கோழிகள் சாவு
ஆரணி அருகே பண்ணையில் தீ பிடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கோழிகள் இறந்தன.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கீழ்நகர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அருள்பிரகாஷ். இவர் தன்னுடைய சொந்த நிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக கோழி பண்ணை அமைத்து கோழிகறி மற்றும் முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.
விவசாயி அருள்பிரகாஷ் கோழிபண்ணையில் திடிரென தீபிடித்து எரிந்தன. இதில் தீ கொளுந்து விட்டு எரிந்த காரணத்தினால் பண்ணையில் இருந்த சுமார் 7 லட்சம் மதிப்பிலான கோழிகள் தீயில் கருகி இறந்தன.
தகவலறிந்த ஆரணி தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கோழிபண்ணை தீயில் கருகி தீக்கிரைரையானது.
இச்சம்பவம் குறித்து விவசாயி கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் போட்டியில் யாராவது தீ வைத்துள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.