நகைக்கடையில் போலி தங்க நகையை விற்பனை செய்ய முயற்சித்த 3 பெண்கள் கைது

3 Women Arrested For Fake Gold Jewel Sale கண்ணமங்கலத்தில் உள்ள நகைக்கடையில் போலி தங்க நகையை விற்பனை செய்ய முயற்சித்த 3 வடமாநில பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-02 10:49 GMT

3 Women Arrested For Fake Gold Jewel Sale

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள நகைக்கடையில் போலி தங்க நகையை விற்பனை செய்ய முயற்சித்த 3 வடமாநில பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

கண்ணமங்கலம் நகரத்தில் பிரபல நகை கடை இயங்கி வருகிறது,இக்கடையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள், ஒரு கைக்குழந்தையுடன் 3 சவரன் நகையை விற்பனை செய்ய வந்துள்ளனர். அந்த நகையை பரிசோதித்த கடை ஊழியர்கள், அந்த நகைகள் தங்கமூலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து உடனடியாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார், வட மாநில பெண்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். நகைக் கடைக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை எல்லாம் ஆய்வு செய்த போலீஸார், மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் குறித்து முழு விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ஒரிஜினல் தங்க நகை மற்றும் போலி நகை செயின்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை,  வந்தவாசி,  செங்கம்,  செய்யாறு, ஆரணி பகுதிகளில் தங்க நகைக் கடைகளில் போலி நகைகளை கொடுத்து, ஒரிஜினல் தங்க நகைகளை மோசடி செய்யும் வடமாநில பெண்கள் குறித்த தகவல்கள் அனைத்து நகைக்கடைகளுக்கும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News