ஆரணியில் 200 பேர் பங்கேற்ற சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி
ஆரணியில் 200 பேர் பங்கேற்று இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
200 பேர் பங்கேற்ற சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 200 பேர் பங்கேற்று ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடா்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆரணி கோட்டை சிலம்பம் அறக்கட்டளை சாா்பில் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு தொடங்கிவைத்தாா். இதில் ஆரணி, திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய இடங்களில் இருந்து 5 வயது முதல் 40 வயது வரை உள்ள 200 பேர் கலந்து கொண்டனா்.
200 பேருக்கும் சான்றிதழ், பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆரணி கோட்டை சிலம்பம் அறக்கட்டளை நிா்வாகிகள் லோகநாதன், சரவணன், நந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
திருவண்ணாமலையில் விடுதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவண்ணாமலையில் விடுதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை பொது மேலாளர் சுஜாதா தலைமை தாங்கினார். திருவண்ணாமலை விளையாட்டு நல அலுவலர் பாலமுருகன், விடுதி மேலாளர் சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆக்கி, கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் வயதின் அடிப்படையில் 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலையை சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளியில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி
ஆரணி சிஎஸ்இ அரசு நிதி உதவி பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியை ஆரணி டிஎஸ்பி தொடங்கி வைத்தாா்.
அரசுப் பள்ளியில் மாணவா்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு வகையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆரணியில் சிஎஸ்இ அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. நிகழ்வுக்கு, மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் சின்னப்பன் தலைமை வகித்தாா். உடல்கல்வி ஆசிரியா் ஜெயகாந்தன் வரவேற்றாா்.
போட்டியை, ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். மாவட்ட அளவில் ஆரணி, வந்தவாசி, பெரணமல்லூா், கலசபாக்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, போளூா், செங்கம், கீழ்பென்னாத்தூா், செய்யாறு, வெம்பாக்கம் உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 33 அணிகள் கலந்து கொண்டது.
இதில், வெற்றி பெறும் அணிகள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெறும் என உடற்கல்வி ஆசிரியா்கள் தெரிவித்தனா்.