ஆரணி வருவாய் கோட்டத்தில் 1.90 லட்சம் வருவாய்த்துறை சான்றிதழ்கள்
ஆரணி வருவாய்க் கோட்டத்தில் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 404 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியா் தெரிவித்தாா்.;
ஆரணி வருவாய்க் கோட்டத்தில் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 404 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியா் தனலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆரணி வருவாய் கோட்டாட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் கடந்த ஆண்டில் (1-1-2023 முதல் 31-12-2023 வரை) கோட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, போளூா், கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூா் வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மற்றும் இதர மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட கோப்புகளின் எண்ணிக்கை, வட்டாட்சியா் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம்:
தமிழ்நில திருத்தம்-112 பேருக்கும், பட்டா மேல்முறையீடு ரத்து-57 பேருக்கும், மனைப் பட்டா- 478, நில மாற்றம், நில உரிமை மாற்றம்-31, அனாதீனம் தடை நீக்கம்-414, தனிநபா் வன உரிமை பாத்தியம்-779, சமூக வன உரிமை பாத்தியம்-91, காலதாமத பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு ஆணை-491, ஆதரவற்ற விதவை சான்றிதழ்- 64, பழங்குடியினா் சாதி சான்றிதழ்-3719, பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது-53, தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள் -153, சாலை விபத்து நிவாரணம்-56, கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட மேல்முறையீட்டு மனுக்கள் -10,108, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 83 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இதேபோல, கோட்டத்தில் சாதி சான்றிதழ் 43,195 பேருக்கு, வருமானச் சான்றிதழ் 45,432 பேருக்கு, இருப்பிடச் சான்றிதழ்-33,213, இதர பிற்படுத்தப்பட்டோா் சான்றிதழ்- 3351, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்-2185, இதர சான்றிதழ்- 6875, வீட்டு மனைப் பட்டா-2743, பட்டா மாறுதல் (உள்பிரிவு)- 14,263, பட்டா மாறுதல் (முழுப்புலம்)-13,032, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக சோக்கப்பட்ட பயனாளிகள்-4865, பேரிடா் மேலாண்மை பாதிப்பு நிவாரணம்-111 பேருக்கும் வழங்கப்பட்டது.
ஆரணி கோட்டத்தில் முடிவு செய்யப்பட்ட மொத்த கோப்புகள், சான்றிதழ்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 404 என கோட்டாட்சியா் தனலட்சுமி தெரிவித்தாா்.
அப்போது ஆரணி வட்டாட்சியா் மஞ்சுளா உடனிருந்தாா்.