ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 1,20,000 பணம் பறிமுதல்.

ஆரணி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1,20,000 தொகையை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்;

Update: 2021-03-08 16:15 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆரணி to வந்தவாசி ரோடு, ஆகாரம் கூட்ரோட்டு பகுதியில்,சேத்துப்பட்டு தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலாஜி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வந்தவாசி தாலுக்கா, காந்திநகர்,பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டிவந்த டிராக்டர் நிறுத்தி சோதனை செய்ததில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூபாய் 1,20,000 தொகையை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த பணத்தை கைப்பற்றி ஆரணி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடியிடம் அளித்து பின்னர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏழுமலையிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News