ஆரணி அருகே லாரியும், பஸ்ஸும் மோதி விபத்து : லாரி டிரைவர் பலி

ஆரணி அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி பயங்கர விபத்து. ஒருவர் பலி, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்;

Update: 2021-07-09 06:35 GMT

விபத்தில் சேதமடைந்த அரசு பேருந்து

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, வடமாதிமங்கலம் கூட்ரோடு பகுதியில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் திருவண்ணாமலையில் இருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஆரணியில் இருந்து ரேஷன் அரிசியை இறக்கிவிட்டு போளூர் நோக்கிச்சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பூபாலன் (வயது 44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 10 பயணிகளுக்கு மேல் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக களம்பூர் போலீசார் லாரி டிரைவரின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் விபத்து நடந்த இடத்திற்கு ஜேசிபி வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பேருந்தும் லாரியும் அகற்றப்பட்டு போக்குவரத்து உடனடியாக சரி செய்யப்பட்டது.

Tags:    

Similar News