கண்ணமங்கலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி
கண்ணமங்கலம் அருகே ஒன்னுபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டியை முன்னாள் அமைச்சர் வழங்கினார்;
கண்ணமங்கலம் அடுத்த ஒன்னுபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை நிரஞ்சனா தண்டபாணி தம்பதியர் இலவசமாக வழங்கினர்.
இதனை முன்னாள் அமைச்சர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், திரு. சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்கள். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் தினகரன் பெற்றுக்கொண்டார்.