நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 6 நாள் ஸ்டிரைக்
நூல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் வரும் மே16- 21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நகரமான திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள், இங்கு பணியாற்றி கொரோனா தாக்கத்தால் பல சோதனைகளை சந்தித்த திருப்பூர் தொழில் நிறுவனங்கள், தற்போதுதான் மீண்டு வரத் தொடங்கி உள்ளன.
இதனிடையே, நூல் விலை உயர்வு தொழில் நுறையினருக்கு பெரும் சவாலாக மாறியது. கடந்த மாதம் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ. 30 வரை உயர்ந்த நிலையில், மீண்டும் தற்போது ரூ. 40 உயர்ந்து ஒரு கிலோ ரூ.480 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, மத்திய - மாநில அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் எந்த பலனும் கிட்டவில்லை.
இந்த நிலையில், வரும் 16ம் தேதி முதல், மே 21ம் தேதி வரை ஆறு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, திருப்பூர் தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதிரடியாக, பனியன் நிறுவனங்கள் 6 நாட்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருப்பது, தொழில்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.