தேசியக்கொடி வேணுமா? போஸ்ட் ஆபீஸ்க்கு வாங்க...!
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் உள்ள தபால் அலுவலகங்களில், தேசியக்கொடி விற்பனை செய்யப்பட உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூா் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய திருநாட்டின் 76வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைத்து, இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது நமது பாரம்பரியாக இருந்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி வந்த நிலையில் கடந்தாண்டில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் விரும்பினால் தங்களது வீடுகள், அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றிக்கொள்ளலாம் என, மத்திய அரசு மக்களுக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, கடந்தாண்டில் சுதந்திர தின நாளில் வீடுகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும், மூவர்ண தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது. பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில், தேசியக்கொடி ஏற்றினர். அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தேசியக்கொடி கம்பீரமாக பறந்தது.
இந்நிலையில், வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் நிலையில், தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். இதையடுத்து, அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்கும் வகையில் திருப்பூா் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் ஒரிரு நாள்களில் தேசியக் கொடி விற்பனைக்கு வர உள்ளது.
தேசியக் கொடிக்கு ரூ.25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால், அஞ்சல் ஊழியா்கள் மூலமாக வீடுகளுக்கே தேசியக் கொடி விநியோகம் செய்யப்படும்.
மேலும், அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் ரூ.25 செலுத்தி, தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளலாம். அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்கள் மொத்தமாக தேசியக் கொடியை வாங்க விரும்பினால், திருப்பூா் கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், தாராபுரம் தலைமை அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.