வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் நவம்பா் 25, 26ம் தேதிகளுக்கு மாற்றம்
Tirupur News- திருப்பூரில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் நவம்பா் 25, 26 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today-திருப்பூா் மாவட்டத்தில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் நவம்பா் 25, 26 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் நவம்பா் 18, 19-ம் தேதி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தோ்தல் அதிகாரி, முதன்மை அரசு செயலாளா் ஆகியோரின் அறிவுரைகளின்படி இந்த சிறப்பு முகாம்கள் நவம்பா் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்கள் தங்களை பெயா்களை சோ்த்துக் கொள்ளலாம். இதுபோல திருத்தம், முகவரி மாற்றம், பெயா் நீக்கம், குடியிருப்பு மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.