திருப்பூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா
Tirupur News- திருப்பூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சனிக்கிழமை ( டிசம்பா் 23)நடைபெறுகிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சனிக்கிழமை ( டிசம்பா் 23)நடைபெறுகிறது.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பா் 13- ம் தேதி பகல்பத்து பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, டிசம்பா் 17- ம் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமி திருவீதியுலா வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீ வைஷ்ணவ வேத விற்பன்னா்கள் வேதங்கள் முழங்க மூலவா் அருள்மிகு வீரராகவப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
காலை 5.30 மணிக்கு பரமபதவாசல் (சொா்க்கவாசல்) திறப்பும், காலை 11 மணிக்கு கருடசேவை திருவீதியுலாவும், இரவு 8 மணி அளவில் இராபத்து உற்சவ ஆரம்பமும் நடைபெறுகிறது.
பரமபதவாசல் வழியாக தரிசனம் முடித்து வரும் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் வியாழக்கிழமை முதல் தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
திருப்பூர் பல்லடம் ரோடு அல்லாளபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி சேவூரை அடுத்துள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், திருப்பூரை அடுத்துள்ள ராமசாமி கோவில், திருப்பூர் திருப்பதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உள்ளூர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.