உடுமலை நூலகத்தில் உலக சிக்கன நாள் கொண்டாட்டம்

உலக சிக்கன நாளையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பின் அவசியம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

Update: 2021-11-01 01:15 GMT

உலக சிக்கன நாளையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பின் அவசியம் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

உலக சிக்கன நாளையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பின் அவசியம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

ஆண்டுதோறும், அக்., 30ல், உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூலக வாசகர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

நூலகர் கணேசன், தலைமை வகித்தார். நுாலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தபால் அலுவல் கங்களில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், சேமிப்பின் அவசியம் குறித்து, தலைமை தபால் அலுவலர் சிவராஜ் பேசினார்.

நூலக வாசகர் வட்ட துணை தலைவர் சிவகுமார், ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர், சேமிப்பு குறித்து வாசகர்களுடன் கலந்துரையாடியானர். இதற்கான ஏற்பாடுகளை, நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் உட்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News