உடுமலைபேட்டையில் வெண்கூடு பட்டு விலை உயர்வு

அரசு கொள்முதல் மையங்களில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வெண்பட்டுக்கூடுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.;

Update: 2022-02-18 15:30 GMT

வெண்கூடு பட்டு.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும், பட்டுக்கூடுகளை, விவசாயிகள், அரசு கொள்முதல் மையங்களில், விற்பனை செய்கின்றனர். உற்பத்தி குறைவு தட்டுப்பாடு காரணமாக, கோவை, மைவாடி, தர்மபுரி உட்பட அரசு கொள்முதல் மையங்களில், வெண்பட்டுக் கூடுகளுக்கு விலை கிலோவுக்கு, 870 ரூபாயாகவும், சேலத்தில், அதிகபட்சமாக, 900 ரூபாய் வரையும் விலை கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வெண்பட்டுக்கூடுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News