பள்ளிக் குழந்தைகளுக்கு நல உதவி தி.மு.கவினர் வழங்கினர்
உடுமலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு, தி.மு.க.,வினர் நல உதவிகள் வழங்கினர்.;
உடுமலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு, தி.மு.க.,வினர் நல உதவிகள் வழங்கினர். தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, விருகல்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, தி.மு.க.,வினர் நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் இனிப்பு வழங்கினர்.
கட்சியின் வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிரி தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர்.