அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்தனர்.
அதன்பேரில் ராஜவாய்க்கால் பாசன பகுதியில் 4686 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போகத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல், 1728 மில்லியன் கன அடி தண்ணீர் ஆற்றின் மதகு மூலமாக திறக்கப்பட்டது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் அணையில் தற்போது 71.10 அணை தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி நீர் வரத்து உள்ளது.