திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 25 அடியாக சரிவு; விவசாயிகள் கவலை

Tirupur News,Tirupur News Today- உடுமலை, திருமூர்த்தி அணையின் நீர்மட்டம், 25 அடியாக குறைந்துவிட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-06-08 13:13 GMT

Tirupur News,Tirupur News Today-திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் குறைந்ததால், விவசாயிகள் கவலை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடியாக உள்ளது. பிஏபி பாசன தொகுப்பு அணைகளின் இது கடைசி அணையாகும் .இதன் மூலம் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில், 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன .

தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை காரணமாக தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் .அப்போது திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர் வரத்து இல்லாததால் தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது.

பிஏபி அணைகளின் தாய் அணையாக கருதப்படும் வால்பாறை சோலையார் அணையில் மொத்தமுள்ள 165 அடியில் வெறும் 22. 49 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. இதே போல் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் 13 .16 அடிக்கும் 170 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில் 67. 75 அடிக்கும் திருமூர்த்தி அணையில் 29. 19 அடிக்கும் மட்டுமே நீர்மட்டம் உள்ளது.

திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போது அதைவிட 5 அடி குறைவாக உள்ளது. நீர்வரத்து ஒரு கண அடியாக உள்ளது .27 கன அடி நீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கும். எனவே விரைவில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News