வாக்காளர் பட்டியலில் சேர்க்க 4 நாள் முகாமில் 2,712 பேர் ஆர்வம்

உடுமலை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 2,712 பேர் ஆர்வம் காட்டியுள்ளனர்.;

Update: 2021-11-23 15:15 GMT

கோப்பு படம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கல், திருத்தம் மேற்கொள்ள கடந்த, 13, 14 மற்றும் 20, 21 ஆகிய தேதிகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. உடுமலை சட்டசபை தொகுதியில், 294 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள, 125 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

நான்கு நாள் நடந்த முகாமில், 2,712 பேர் புதிய வாக்காளர்களாக இணைய விண்ணப்பித்துள்ளனர். 513 பெயர் நீக்கல் விண்ணப்பம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள, 410 விண்ணப்பங்களும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய, 267 விண்ணப்பங்கள் என, 3,902 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News