உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரை அகற்ற வந்த நகராட்சி : தடுத்து நிறுத்திய பொது மக்கள்
உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரையை அகற்ற வந்த நகராட்சி ஊழியர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யூனியன் ஆபீஸ் அருகே பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. நகராட்சி அனுமதி இல்லாமல் கோவில் பணி நடைபெறுவதாக கூறி, கோவில் மேற்கூரையை பிரிக்க நகராட்சி ஊழியர்கள் இன்று வந்தனர்.
தகவல் அறிந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து, நகராட்சி ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தளி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முடிவில், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறி போலீஸார் சமாதானம் செய்தனர். அதைத்தொடர்ந்து பொது மக்களும், நகராட்சி ஊழியர்களும் களைந்து சென்றனர்.