உடுமலை, சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடின

ஊரடங்கு காரணமாக உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-04-25 12:30 GMT

ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் உடுமலை பேருந்து நிலையம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமாக பரவ துவங்கி உள்ளது. இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தடுப்பு நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொது ஊரடங்கையொட்டி உடுமலை பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை.

அதேபோல், உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஊடரங்கு காரணமாக பக்தர்கள் வருகையின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News