உடுமலை : ரூ.1 லட்சம் மதிப்பு கோழி, ஆடுகளை கொன்ற தெரு நாய்கள்!
உடுமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் ஒரு லட்சம் மதிப்பிலான ஆடு, கோழிகள் இறந்தன.;
தெரு நாய்கள் கடித்ததில் இறந்துகிடக்கும் ஆடுகள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சபரிசிவக்குமார் (வயது 40) . விவசாயியான இவர், ஆடு, கோழி வளர்த்து வருகிறார். தோட்டத்து ரோடு பகுதியில் இருந்து திடீரென புகுந்த 10 க்கும் மேற்பட்ட தெருநாய்க்கள், அங்கிருந்த 35கோழி மற்றும் 8 க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியது.
இதனால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிகளும், ஆடுகளும் இறந்தன. இதனால் விவசாயி கவலை அடைந்து உள்ளார். குறிஞ்சேரி சுற்று வட்டாரத்தில், கொரோனா ஊரடங்கால், உணவு தேடி ஏராளமான தெரு நாய்கள் சுற்றி வருகிறது.
இதன் காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். மேலும், இறந்த ஆடு, கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.