உடுமலை சாலையில் காட்டு யானைகள் உலா
உடுமலை மூணாறு சாலையில், காட்டு யானைகள் உலா வந்தன.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை மூணாறு சாலையில், அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருவது வழக்கம். தற்போது வனப்பகுதியில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில், காட்டு யானைகள், உடுமலை-மூணாறு சாலையில் உள்ள பூங்கன் ஓடை, ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பல இடங்களில் கூட்டம், கூட்டமாக நடமாடுகின்றன. இவ்வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியபடி பயணிக்க கூடாது. சாலையை கடக்கும் வன விலங்குகளை, தொந்தரவு செய்யக்கூடாது என, வனத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.