உடுமலை ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வியாபாரிகள் கோரிக்கை
உடுமலை, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை, சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.;
உடுமலை வியாபாரிகள் சங்க ஆண்டு மகாசபை கூட்டம், வியாபாரிகள் சங்க அலுவலக கட்டடத்தில் நடந்தது. சங்க தலைவர் பால நாகமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.
நகராட்சி பகுதியில் சிதிலமடைந்துள்ள சாக்கடை கால்வாயை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே, தலைவராக உள்ள பால நாகமாணிக்கம், செயலாளர் குமரன், பொருளாளர் மெய்ஞான மூர்த்தி உள்ளிட்ட ஏற்கனவே உள்ள நிர்வாகக்குழுவினர் அடுத்த மூன்றாண்டுக்கு தொடர்ந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.