உடுமலை; பூலாங்கிணறு பகுதியில் நாளை மின்தடை
Tirupur News- உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள பூலாங்கிணறு பகுதியில், நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு பகுதியில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பூலாங்கிணறு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.எம். நகர் பீடரில் உள்ள உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் வகையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மொடக்குபட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.